கரூரில் வாக்குச்சாவடி மையங்கள் சீரமைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! | Polling Centre Reconstruction Consulting Meeting

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (14/07/2018)

கடைசி தொடர்பு:10:40 (14/07/2018)

கரூரில் வாக்குச்சாவடி மையங்கள் சீரமைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் ஆலோசனைக்கூட்டத்தில்,'சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடி மையங்கள் சீரமைத்தல் பணி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சாவடி கூட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்குச்சாவடி மையங்கள் சீரமைத்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும்போது, ``கரூர் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடிகள் புதியதாகவும், இடமாற்றம் செய்யவும், பெயர்மாற்றம் செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. 134 அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் ஏற்கெனவே 245 வாக்குச்சாவடிகளும், புதியதாக 5 வாக்குச்சாவடிகளை உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

135 - கரூர் சட்டமன்ற தொகுதியில் ஏற்கெனவே 256 வாக்குச்சாவடிகளும், 5 புதியதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை சேர்த்து தற்போது 261 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதேபோல 136 - கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கெனவே 249 வாக்குச்சாவடிகளும், 4 புதியதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளைச் சேர்த்து தற்போது 253 வாக்குச்சாவடிகள் உள்ளன. 137 - குளித்தலை சட்டமன்ற தொகுதியில் ஏற்கெனவே 262 வாக்குச்சாவடிகளும், 5 புதியதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளைச் சேர்த்து தற்போது 267 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆக  மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து ஏற்கெனவே 1,012 வாக்குச்சாவடிகளும், 19 புதியதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளையும் சேர்த்து தற்போது 1031 வாக்குச்சாவடிகளும் உள்ளன.


மேலும், 134 - அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 3 வாக்குச்சாவடிகள், இடமாற்றம் செய்யவும், 5 வாக்குச்சாவடிகள் பெயர்மாற்றம் செய்யவும், 5 வாக்குச்சாவடிகள் பிழை திருத்தம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 135-கரூர் சட்டமன்றத் தொகுதியில் 3 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யவும், 3 வாக்குச்சாவடிகள் பெயர்மாற்றம் செய்யவும், 5 வாக்குச்சாவடிகள் பிழை திருத்தம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 136-கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யவும், 2 வாக்குச்சாவடிகள் பெயர்மாற்றம் செய்யவும், 2 வாக்குச்சாவடிகள் பிழை திருத்தம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 137-
குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 5 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யவும், 3 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளன. 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 19 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யவும், 13 வாக்குச்சாவடிகள் பெயர்மாற்றம் செய்யவும், 10 வாக்குச்சாவடிகள் பிழை திருத்தம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது" என்றார்.