வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (14/07/2018)

கடைசி தொடர்பு:13:18 (14/07/2018)

ஆர்வமும் தொடர் முயற்சியும் இருந்தால் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறலாம்” - மயில்வாகனன் ஐ.பி.எஸ் பேச்சு

ஆர்வமும் தொடர் முயற்சியும் இருந்தால் ஐ.ஏ.எஸ் போன்ற போட்டி தேர்வில் வெற்றி பெறமுடியும் என்று திருச்சி போலீஸ் துணை கமிஷ்னர் மயினாவகனன் விகடன் பிரசுரம் மற்றும் சங்கர் ஐ ஏ எஸ் அகாடமி இணைந்து நடத்திய் ஐலவச பயிற்சி முகாமுல் பேசினார்

ஐ.ஏ.எஸ் பயிற்சி முகாம்

விகடன் பிரசுரம் மற்றும் சங்கர் ஐ ஏ எஸ் அகாடமி ஆகியவை சார்பில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி லாலி அரங்கத்தில் இந்திய குடிமைப் பணி மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. திருச்சி போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் ஊக்க உரை ஆற்றினார். 2017-ம் ஆண்டு இந்திய குடிமைப் பணி தேர்வில் தமிழக அளவில் 2-வது இடம் பிடித்த மதுபாலன், போட்டித் தேர்வு பயிற்சியாளர் டாக்டர் சங்கர சரவணன்,   சங்கர் ஐ ஏ எஸ் அகாடமி இயக்குநர் சங்கர் தேவராஜன் ஆகியோர் வழிகாட்டினர்.

vikatan

திருச்சி போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன்  பேசுகையில், ``போட்டித் தேர்வுக்கு படிப்பவர்கள் அதற்கு ஆசைப்பட்டால் மட்டும் போதாது . அந்தக் குறிக்கோளுடன் திட்டமிட்டு உழைக்க வேண்டும். வெற்றி கிடைக்கும் வரை, அதற்குத் தேவையான தகுதியுடன் நீங்கள் இருக்க வேண்டும். ஒரே நாளின் சுயம்புவாக நாம் ஜெயித்துவிட முடியாது. திட்டமிட்டு தினசரி உங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மயில்வாகனன்அதில்தான் வெற்றி அடங்கியுள்ளது. தோல்வி என்பது வாழ்க்கையிலும், போட்டித் தேர்வுகளில் தவிர்க்க முடியாதது. அதை எவ்வாறு கையாண்டு வெற்று பெறுகிறோம் என்பதுதான் முக்கியம். தோல்விக்கான காரணங்களை ஆராயும்போதுதான் அது வெற்றிக்கான பல பாதைகளைக் கற்றுத் தரும். மொட்டு மலர்வதுபோல் வெற்றி பூத்து குலுங்கும். அதற்குத் தோல்வியை விரட்டி அடிக்கும் போராட்ட குணமும் வேண்டும். நீங்கள் ஐ.ஏ.எஸ் போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்றதும் எதுவும் முடிந்துவிடாது. அதுதான் அரசுப் பணியின் தொடக்கம். இதுவரை உங்களுக்கு சமூகத்தை பற்றி புத்தகங்களில் படித்ததுதான் தெரியும். அரசுப் பணியில் இருக்கும்போதுதான் இந்தச் சமூகத்தைச் சரியாக பார்ப்பீர்கள். அதிலும் நேர்மையாகப் பணியாற்ற வேண்டும். கெட்டதைச் செய்து வாழ்வதைவிட நல்ல விஷயத்துக்காக சாவதே மேல் என்று சொல்வார்கள்  அதுபோல நாமும் அரசு அதிகாரி ஆன பின்பு எப்போதும் சேவை பணியாற்ற வந்திருக்கிறோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும். மக்களுக்குப் பணி செய்வதே நமது முதல் பணி” என்று வழிகாட்டினார்.

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் சங்கர் தேவராஜன் பேசுகையில், ``ஐ.ஏஸ் தேர்வுக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றாலே நீங்கள் இந்தப் பரீட்சையை எழுதலாம். உங்கள் பள்ளி பாடப் புத்தகத்தில் படித்த விஷயத்தை எல்லாம் இந்தத் தேர்வில் பொது அறிவு கேள்வியாக கேட்பார்கள். எனவே, எட்டாம் வகுப்பிலிருந்து பள்ளிக் கூடத்தில் படிக்கும்போதே பாடப் புத்தகங்களைப் புரிந்து படிக்க வேண்டும். அதோடு பத்திரிகைகளையும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தப் பழக்கம், ஐ.ஏ.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற உங்களுக்கும் உதவியாக இருக்கும்” என்றார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க