வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (14/07/2018)

கடைசி தொடர்பு:20:10 (14/07/2018)

`செல்வமகள் திட்டம் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது' - மத்திய மண்டல இயக்குநர் தகவல்!

அஞ்சல்துறை மத்திய மண்டலத்தின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 40 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குநர் தாமஸ் லூர்துராஜ் தெரிவித்துள்ளார்.

 மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குநர் தாமஸ் லூர்துராஜ்

அரியலூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் கிராமத்தில் துணை அஞ்சலகம் திறப்பு விழா நடைபெற்றது. சிதம்பரம் எம்.பி சந்திரகாசி, மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அம்பேஷ் உப்மன்யு, மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குநர் தாமஸ் லூர்துராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, தனியார் சிமென்ட் ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை அஞ்சல் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம், அடல் பென்சன் திட்டங்களில் கணக்கு தொடங்கிய பயனாளிகளுக்கு கணக்குப் புத்தகங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் அஞ்சல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குநர் தாமஸ் லூர்துராஜ்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாமஸ் லூர்துராஜ், ``செல்வமகள் சேமிப்புத் திட்டம் 10 வயதுக்கு குறைவான அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் பயனுள்ள திட்டமாகும். பெண் குழந்தைகள் 21 வயது ஆகும்போது மேற்படிப்புக்கோ அல்லது திருமணச் செலவுக்கோ உதவிகரமாக இருக்கும். அரியலூர் மாவட்டம் உள்ளடங்கிய மத்திய மண்டலத்தில் 40 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களுக்குச் சேவை செய்யும் வகையில் தபால் அலுவலகங்களில் 24 ஏ.டி.எம் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது" என்றார்.