வெளியிடப்பட்ட நேரம்: 22:05 (14/07/2018)

கடைசி தொடர்பு:22:05 (14/07/2018)

3 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை.. 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

வள்ளியூரில் 3 சவரன் நகைக்காக மூதாட்டியை மர்ம நபர்கள் கொலை செய்த சமபவம் தொடர்பாக காவல்துறையினர் இரு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

வள்ளியூர் அருகே தெற்று கள்ளிகுளத்தைச் சேர்ந்தவர், இருதயமேரி. 75 வயது நிரம்பிய இவரது மகன்கள் மற்றும் மகள்கள் வெளியூரில் இருப்பதால் இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் இருதயமேரியை கம்பியால் தாக்கி விட்டு அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையைப் பறித்துச் சென்றனர். சற்று நேரத்துக்குப் பின்னர், வீட்டுக்குச் சென்ற உறவினர்கள் இருதயமேரி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

கொலை - தனிப்படைகள் அமைப்பு

அதனைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும், விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் மற்றும் கம்பியில் இருந்த மர்ம நபர்களின் கைரேகையை பதிவு செய்தனர். அத்துடன், இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்

நகரத்தின் ஒதுக்குப்புறமான வீடுகள் மற்றும் கிராமப் பகுதிகளில் தனியாக வசிக்கும் வயதானவர்களை குறி வைத்து தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் நெல்லை மாவட்டத்தில் ஊடுருவி இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டு உள்ளது.