வெளியிடப்பட்ட நேரம்: 02:43 (15/07/2018)

கடைசி தொடர்பு:02:43 (15/07/2018)

போலி கண்ணீர் புகை குண்டுக்கு பதிலாக வீசபட்ட நிஜ குண்டு... மயங்கி விழுந்த போலீஸார்!

போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் கூட்டம் மற்றும் கலவரம் போன்றவற்றில் கூட்டத்தை கலைப்பதற்கு நடத்தபட்ட போலீஸ் மாப் ஆபரேஷன் ஒத்திகை பயிற்சியில் போலி கண்ணீர் புகை குண்டுகளுக்கு பதிலாக நிஜ கண்ணீர் புகை குண்டுகளை வீசபட்டதால் மூச்சு திணறல் ஏற்பட்டு போலீஸார் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் ஆயதப்படை

தஞ்சாவூர் ஆயதப்படை மைதானத்தில் போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் மற்றும் கலவரங்களின் போது எவ்வாறு கூட்டத்தை கலைப்பது போன்ற பல ஒத்திகை பயிற்சி, டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமையிலும் எஸ்.பி. செந்தில்குமார் முன்னிலையிலும் இன்று நடைபெற்றது. ஒத்திகையின் போது ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுப்பது, தண்ணீர் பீய்ச்சி அடிப்பது, கண்ணீர் புகை குண்டு வீசுதல் மற்றும் தடியடி நடத்துவது மற்றும் துப்பாக்கிச் சுடும் பயிற்சியும் போலீஸாருக்கு கொடுக்கபட்டது. இதில் கூட்டத்தை எப்படி கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைப்பது என்ற ஒத்திகை நடைபெற்றது. அப்போது போலி கண்ணீர் புகை குண்டுகளுக்கு பதிலாக  நிஜ கண்ணீர் புகை குண்டுகள் நான்கு  வீசபட்டதால் அந்த இடமே புகையால் சூழபட்டது. இதில்  6 பெண் போலீஸ், 3 ஆண் போலீஸுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர்.

மயங்கி விழுந்த போலீஸாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் ரகசியமாக மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்று முதலுதவி  சிகிச்சை அளிக்கபட்டது. இதில் சிலருக்கு மூச்சு திணறல் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம், ``பயிற்சியின் போது போலி குண்டுகளுக்கு பதிலாக நிஜ குண்டுகள் வீசபட்ட சம்பவம் நடந்தது உண்மை தான். இதில் அனைவருக்கும் முதலுதவி  சிகிச்சை அளிக்கபட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். பெரிய அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை" என்றனர்.

மற்றும் சிலர் ``ஒரு பெண் போலீஸ் மட்டும் அதிகமாக பாதிக்கபட்டுள்ளார். அவருக்கு மருத்துவகல்லூரியில் தொடர்ந்து சிகிச்சை கொடுக்கபட்டு வருகிறது. மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய போலீஸாரே மெத்தனமாக செயல்பட்டதால் இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது" என்றனர்.

கோவை கல்லூரி ஒன்றில் பேரிடர் பயிற்சியின் போது பயிற்சியாளரால் தள்ளிவிடபட்டு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அடங்குவதற்குள் கூட்டத்தை கலைப்பதற்காக போலீஸாருக்கு நடத்தபட்ட பயிற்ச்சியின் போது நிஜகண்ணீர் புகை குண்டுகள் வீசபட்டதால் பெண் மற்றும் ஆண் போலீஸார் பலர் மயங்கி விழுந்தனர். போலீஸாரே இப்படி மெத்தனமாக நடந்து கொள்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனைபட்டு கொண்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க