8,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் | TN minister speaks about water resources

வெளியிடப்பட்ட நேரம்: 05:35 (15/07/2018)

கடைசி தொடர்பு:05:35 (15/07/2018)

8,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

      
 

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், பாலத்துறை, வேலாயுதம்பாளையம் பாசன வாய்க்கால் பகுதியில் குடிமராமத்துபணிகளை நாடாளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் வாய்க்கால் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினை நாடாளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன்
தலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது, 'கரூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம் கட்டுப்பாட்டிலுள்ள வாய்க்கால்கள் தூர்வாரவும் மற்றும் புனரமைக்கவும் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 10 பணிகள் ரூ.2.32 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளின் பங்களிப்புடன் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 14,394 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. இத்திட்டத்தில் ஒரு பணியாக, கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், புகளூர் வாய்க்கால் மைல் 9/6 முதல் 15/6 வரை கோம்புபாளையம் கிராமத்திலிருந்து புகளூர் கிராமம் வரை 9.6 கி.மீ தூரம் தூர்வாரும் பணி ரூ.17 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இத்தூர்வாரும் பணியை செயல்படுத்துவதன் மூலம் கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்திலுள்ள 8504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன" என்றார்.