வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (15/07/2018)

கடைசி தொடர்பு:07:20 (15/07/2018)

விகடன் செய்தி எதிரொலி : ஓ.பி.எஸ் ஊரில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது

தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பட்டப்பகலில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நேற்று(13/07/18) விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டிருக்கிறது.

'ஒரு பொட்டலம் 100 ரூபாய் – ஓ.பி.எஸ் ஊரில் கஞ்சா விற்பனை அமோகம்’’ என தலைப்பிடப்பட்ட அந்த செய்தியில் பெரியகுளம் பகுதியில் எங்கெங்கு கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த கஞ்சா விற்பனையால் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதன் விளைவாக பெரியகுளம் அருகே உள்ள தென்கரை மற்றும் வடகரை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த ஆறுபேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா விற்பனை கைப்பற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ’இந்த கஞ்சா கும்பலைச் சேர்ந்த சிலர் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்களை தேடி வருகிறோம். விரைவில் கைது செய்துவிடுவோம்'  என்றனர்.