வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (15/07/2018)

கடைசி தொடர்பு:12:00 (15/07/2018)

”மாதிரி பாலத்தை தெர்மாகோலில் போடவேண்டாம்” செல்லூர் ராஜூ எச்சரிக்கை !

செல்லூர் ராஜூ ஏற்பாச்டு செய்த விழா

மதுரை மாநகர் காளவாசல் சாலைச் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க  மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் சில பூமி பூஜை விழாக்களில் பங்கேற்க  தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள் மதுரை வந்துள்ளனர். 

காளவாசல் சந்திப்பில் வர உள்ள பாலத்தின் மதிப்பீடு ரூ 54 கோடி ஆகும். ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தப் பாலம் கட்டப்படுகிறது. 4 வழித்தடம் கொண்ட  இம்மேம்பாலத்தின்  மொத்த நீளம் - 750. மீட்டர். இது 15 மாதத்திற்குள் கட்டி முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாலம் அமைப்பதற்கான திட்டம் 2012 -13 ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது அறிவிக்கப்பட்டது . 

இந்நிலையில் இந்தப் பாலத்தை கட்டி முடிக்க தற்போது விரைவான வேலையில் நிர்வாகம் இறங்கியுள்ளது. இதன் அடிக்கல் நாட்டுவிழாவின் ஏற்பாடுகளை அமைச்சர் செல்லூர் ராஜூ மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். இந்நிலையில் பாலத்தின் மாதிரியை அட்டைப் பெட்டியில் மட்டும் செய்யுங்கள் தெர்மாகோலில் செய்யாதீர்கள். அப்படி தெர்மாகோலில் செய்தால் மீம்ஸ் போட்டு கலாய்ப்பார்கள் என்று செல்லூர் ராஜூ நகைச்சுவையாக எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அமைச்சர் விருப்பப்படி அட்டைப் பெட்டி போன்ற பொருளில் மாதிரி பாலத்தை செய்து மேடையில் காட்சிக்கு வைத்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.