குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைத்தவர்கள் எங்கு இருக்கிறார்கள்” அமைச்சர் தங்கமணி தாக்கு

"குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைத்தவர்கள், இப்போது எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். அம்மா ஆன்மா அவர்களைப் பழிவாங்கிக்கொண்டிருக்கிறது" என்று சசிகலா குடும்பத்தை வெளுத்து வாங்கினார் அமைச்சர் தங்கமணி. 

 அமைச்சர் தங்கமணி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், " மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது காவிரிக்காக போராடாத திமுக தற்போது காவிரியை பெற்றுக்கொடுத்தது போல் நாடகமாடுகின்றது. தற்போது காவிரி நீர் நமக்குக் கிடைத்துள்ளது என்றால் அதற்கு அதிமுக தான் உரிமைக்கொண்டாட முடியும். ஜெயலலிதாவின் ஆன்மா வழிகாட்டுதல் படி ஆட்சி நடப்பதால் யாராலைலும் ஆட்சியைக் கலைக்க முடியாது ஆட்சியைக் கலைக்கவே தற்போது எதிரியும் துரோகியும் ஒன்று சேர்ந்துள்ளனர். ஜெயலலிதாவிற்கு உயர் சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம். 

அதைத் தடுத்து சதித்திட்டம் தீட்டி ஆட்சியைப் பிடிக்க நினைத்த அந்தக் குடும்பமே எங்கு இருக்கிறார்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்கே தெரியும் அதுமட்டுமில்லாமல் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் ஏற்றுக்கொண்டோம். சிறைச்சாலைக்குச் செல்லும் முன் திடீரென்று துணை பொதுச்செயலானராக கட்சியில் உறுப்பினராக இல்லாத தினகரனை சசிகலா நியமித்தார். சட்டமன்ற உறுப்பினராக உள்ள தினகரன் மக்களின் பிரச்னைக்காக பேசியது என்ன? மேலும் தினகரன் 11 வருடம் எம்.பி யாக இருந்த போது 8 முறை தான் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். இவர் மக்களுக்காக என்ன செய்யப்போகிறார்? 

மத்திய அரசின் எல்.இ.டி பல்பு வழங்கும் திட்டத்திற்கு நல்ல வரவேற்புள்ளது. அனைத்து மக்களுக்கும் வழங்க மின்சாரத்து நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையும் பெரும்பாங்காற்றி வருகிறது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!