வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (15/07/2018)

கடைசி தொடர்பு:12:01 (16/07/2018)

`கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்' - கனிமொழி எம்பி!

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதே காமராஜருக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி

முன்னாள் முதல்வர் காமராஜரின் 116-வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா ”கல்வி வளர்ச்சி நாளாக” அறிவிக்கப்பட்டு பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பிலும் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டதுடன், தமிழகம் முழுவதும் நிகழ்ச்சிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் விருதுநகரில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர். அப்போது காமராஜர் சிலைக்கு அவர் மரியாதை செலுத்த உள்ளார். 

இதற்கிடையே, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சென்னையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``மத்திய பொதுப்பட்டியலில் இருக்கக்கூடிய கல்வியை மாநில பட்டியலை கொண்டுவருவதான் காமராஜருக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு. எல்லா எதிர்க்கட்சிகளும் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும். இதற்காக ஒரு கூட்டணி உருவாக்கப்பட வேண்டும். இது தான் தற்போது பாஜகவுக்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க