பொதுமக்களுடன் அமர்ந்து கால்பந்து ஃபைனலை ரசித்த நாராயணசாமி!

உலகக்கோப்பை கால்பந்து இறுதிஆட்டத்தை பொதுமக்களுடன் கடற்கரையில் அமர்ந்து ரசித்துள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

நாராயணசாமி

ஒரு மாத காலமாக நடந்து வந்த ஃபிஃபா 2018 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் நேற்று மாஸ்கோவில் நடைபெற்றது. முக்கிய அணிகள் நடைகட்டிய நிலையில், இங்கிலாந்து, குரோஷியா, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட அணிகள் உலகக்கோப்பை அரையிறுத்துக்குள் நுழைந்தன. ஃபிரான்ஸுடனான அரையிறுதியில் தோற்ற பெல்ஜியம் அணியும், மற்றொரு அரையிறுதியில் குரோஷியாவிடம் இங்கிலாந்தும் தோற்று வெளியேறியது. இதனால் அப்போதே இறுதி ஆட்டத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியது. காரணம், குரோஷியா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் முதல்முறையாக ஃபைனலுக்கு முன்னேறியதும், சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கோப்பையை கையில் ஏந்துவதற்கான வாய்ப்பை பிரான்ஸ் பெற்றதும் தான்.  

எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போலவே இறுதி ஆட்டமும் இருந்தது.  இறுதிப்போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோஷம் காட்ட ஒட்டுமொத்த ரசிகர்களும் உற்சாகத்தில் இருந்தனர். குறிப்பாக பிரான்ஸ் வீரர்கள் குரோஷியாவின் அரணை தகர்த்தனர். இதில் 4 - 2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 20 ஆண்டுகளுக்குப் பின் பிரான்ஸ் உலகக் கோப்பையை உச்சி முகர்ந்தது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஃபைனல் இருந்தது. வெற்றிப்பெற்ற பிரான்ஸுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

நாராயணசாமி

பிரான்ஸ் ரசிகர்கள் வெற்றிக்களிப்பில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்,  பிரான்ஸ் - குரோஷியா இடையேயான ஃபைனலை புதுச்சேரி முதல்வர் நாரணயசாமி பொதுமக்களுடன் அமர்ந்து பார்த்துள்ளார். கால்பந்து  இறுதி ஆட்டத்தை பொதுமக்கள் காணும் வகையில் புதுச்சேரி கடற்கரையில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது பொதுமக்களுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் தனது சகாக்களுடன் அமர்ந்து போட்டியை கண்டுகளித்தார். பொதுமக்களுடன் அமர்ந்து அவர் கால்பந்து போட்டியை ரசித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பின்னர் வெற்றிபெற்ற பிரான்ஸ் அணிக்கு நாராயணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!