ஓடும் ரயிலில் பெண்ணுக்குப் பிரசவம் - அசத்திய பெண் காவலர்கள்! | Mumbai woman travelling in train gives birth to twins

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (16/07/2018)

கடைசி தொடர்பு:11:32 (16/07/2018)

ஓடும் ரயிலில் பெண்ணுக்குப் பிரசவம் - அசத்திய பெண் காவலர்கள்!

மும்பை அருகே, ரயிலில் பயணம்செய்துகொண்டிருந்த  பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவம்]

PC : ANI

மும்பையைச் சேர்ந்தவர் ஷேக் சல்மா தபசம் (30).  எல்.டி.டி- விசாகப்பட்டினம் விரைவு (LTT-Visakhapatnam Express) தொடர்வண்டியில் பயணம்செய்துகொண்டிருந்தார். மும்பை அருகே ரயில் சென்றபோது, சல்மா தபத்துக்கு  திடிரென பிரசவ வலி ஏற்பட்டது. அருகிலிருந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். பிரசவ வலியால் பெண் ஒருவர் துடித்துக்கொண்டிருக்கிறார் என்ற தகவலையறிந்த  நீலம் குப்தா, சுரேகா கதம், என்ற இரண்டு பெண் காவலர்கள், அந்தப் பெண்ணுக்கு ரயிலிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். இதையடுத்து, அந்தப் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. இதையறிந்த பயணிகள், உற்சாகத்தில் கைத்தட்டி ஆரவாரம் எழுப்பினர். மும்பை அருகே தொடர்வண்டி  நிறுத்தப்பட்டு, அந்தப் பெண் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாயும், சேய்களும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரயிலில் பெண்ணுக்குப் பிரசவம்பார்த்த காவலர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன. ஓடும் ரயிலில் நடந்த இந்தப் பிரசவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.