பிரபல நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனை!

பிரபல எஸ்.பி.கே நிறுவனங்களின் உரிமையாளர் செய்யாதுரை என்பவரின் வீடு மற்றும் அலுவலகங்களில்,  தமிழகம் முழுவதும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இவருடைய நிறுவனத்தில் முக்கிய அரசியல்வாதிகளுக்குத் தொடர்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

பிரபல எஸ்.பி.கே. நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை


விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டியைச் சேர்ந்தவர்  செய்யாதுரை. இவர் எஸ்.பி.கே என்ற நிறுவனம் மூலம் நெடுஞ்சாலை மற்றும் மிகப்பெரிய அரசு கட்டுமான ஒப்பந்தங்களை எடுத்துவருகிறார். தற்போது தமிழக அரசு அறிவிக்கும் மிகப்பெரிய சாலைப்பணி ஒப்பந்தங்களை இவரே எடுத்துவருவதாகச் சொல்லப்படுகிறது.  இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் ஐந்து வாகனங்களில்  வந்த  வருமான வரித் துறை அதிகாரிகள், பாளையம்பட்டியில் உள்ள செய்யாதுரையின் நான்கு வீடுகள் மற்றும் அங்குள்ள  அலுவலகத்தில் தொடர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இதுபோல சென்னை, மதுரையிலுள்ள ஏ.பி.கே ஹோட்டல், அலுவலகங்களில் தொடர் சோதனை நடந்துவருகிறது. பலகோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆளும்கட்சியின் முக்கிய அமைச்சர்களுக்கு இவர் மிகவும் நெருக்கமானவர் என்றும் சொல்லப்படுகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!