`புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ்

தமிழகம் ஊழல் மயமாகியுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமாருக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடிகொடுத்தார்.

`தமிழகம் ஊழல்மயமாகியுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை'' என அமைச்சர் ஜெயக்குமாருக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பா.ஜ.க. மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. இதில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் உறுதியாக அமையும். மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கவும் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். மீன் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவருகிறது. மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் திட்டம் வகுத்து வருகிறோம். நீரோடி, வள்ளவிளை, மண்டைக்காடு உள்ளிட்ட பல இடங்களில் கடலரிப்பு பிரச்னைகள் தீர்க்கப்படும். அமைச்சர் ஜெயக்குமார் நான் என்ன பேசினேன் என்பதைப் புரிந்துகொண்டு பேச வேண்டும்.

பொன் ராதாகிருஷ்ணன்

சத்துணவு முட்டையில் 5,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நான் பதிலளிக்கும்போது, முட்டை ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். தமிழ்நாடு ஊழல் மயமாகியுள்ளது. தமிழக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை  மொட்டையடிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தேன். தமிழகத்தில் ஆண்ட கட்சியாலும், ஆளும்கட்சியாலும் ஊழல் நடந்துள்ளது என்றுதான் நான் கூறினேன். தமிழகம் ஊழல் மயமாகியுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. ஊழலில் இருந்து நாம் விடுபட வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!