வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (16/07/2018)

கடைசி தொடர்பு:20:40 (16/07/2018)

தென்னைக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும்: கோரிக்கை வைக்கும் எம்.எல்.ஏ

சேலத்தில் எட்டு வழிச் சாலை அமைக்க தென்னை மரத்துக்கு ரூபாய் 40,000 வழங்கப்படுவதுபோல் ராஜபாளையம் தொகுதியில் முழுவதும் சேதமடைந்த மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். 

சூறாவளியில்


ராஜபாளையம் வட்டாரத்தில் நேற்று முன்தினம் வீசிய பலத்த சூறாவளி காற்றால் பாதிப்படைந்த 4,000 ஏக்கர் தென்னை மரங்கள், இரண்டாயிரம் மரங்கள் ஆகியவற்றை ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனுடன் தாசில்தார், வேளாண்மைத்துறை அலுவலர்கள் சென்று பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், ``சூறாவளி காற்றால் மரங்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. மேலும், ஒரு வருடம் மகசூல் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு சேலத்தில் சாலை அமைக்க மரத்துக்கு 40,000 ரூபாய் வழங்கப்படுவதுபோல் இங்கும் முழுவதும் சேதமடைந்த மரங்களுக்கு 40,000 ரூபாயும் பாதிப்படைந்த மரங்களுக்கு 7,000 ரூபாயும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அங்கிருந்தபடியே விருதுநகர் கலெக்டர், டி.ஆர்.ஓ, வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப்சிங் பேடியிடமும் தொடர்பு கொண்டு எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் பேசினார். வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளரும் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்ததாகத் தெரிவித்தவர், இது சம்பந்தமாகப் புகார் தெரிவிக்க நிவாரணம் பெற வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களின் அலைபேசி எண்களுடன், தன்னுடைய எண்ணையும் கொடுத்தார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க