வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு..! ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராகத் தி.மு.க வழக்கு

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கு

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக அவர்மீது தி.மு.க அமைப்புச் செயலாளர் அர்.எஸ்.பாரதி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், துணை முதல்வர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த சொத்து மதிப்புக்கும் வருமான வரித்துறையில் தாக்கல் செய்த கணக்குக்கும் முரண்பாடு உள்ளது. துணை முதல்வர் தன் மனைவி, மகன்கள் மற்றும் குடும்பத்தினர் பெயரில் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலின்போது வேட்புமனுவில் வருமானம் குறித்து தவறான தகவலைத் தெரிவித்துள்ளார். வெளிநாடு மற்றும் இந்திய நிறுவனங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளனர். இதுகுறித்து கடந்த மார்ச் 10-ம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!