வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (17/07/2018)

கடைசி தொடர்பு:00:00 (17/07/2018)

தீ விபத்துகளைத் தடுப்பது எப்படி..! ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி

 ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கை குறித்த செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கை குறித்த செய்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தீ விபத்து தடுப்பு குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் அழிவுகளிலிருந்து தன்னையும் மற்றவர்களையும் காத்துக்கொள்வது குறித்த பயிற்சி, பேரிடர் மேலாண்மைத் துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இயற்கை மற்றும் செயற்கையாக ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தன்னையும், மற்றவர்களையும் எப்படிப் பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்த செய்முறைப் பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது. 

ராமநாதபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினரால் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியில் கரியமிலவாயு தீ அணைப்பான்கள், உலர் மாவு தீ அணைப்பான்களைப் பயன்படுத்தும் விதம் குறித்தும், எண்ணெய்யினால் ஏற்படும் தீ விபத்துகள் மற்றும் கேஸ் சிலிண்டரினால் ஏற்படும் தீ விபத்துகளை நுரை தீ அணைப்பான்கள் மற்றும் ஈரத் துணிகளைக் கொண்டு எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் செய்முறைப் பயிற்சிகள் செய்துகாட்டப்பட்டன. மேலும், கட்டட விபத்துகளில் சிக்கியவர்களைப் பாதுகாப்பாக மீட்பது குறித்தும் செய்துகாட்டப்பட்டன.  

மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் முன்னிலையில் நடந்த இந்த செய்முறைப் பயிற்சி நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் சாமிதுரை மற்றும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.