மண்டபம் பகுதியில் 30 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

மண்டபம் பகுதியில், கடத்தல்காரர்களிடமிருந்து 30 கிலோ கடல் அட்டையை வன உயிரினக் காப்பக அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

கடத்தல்


மண்டபம் வடக்கு, தோணித்துறை கடற்கரைப் பகுதியிலிருந்து கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக மண்டபம் வன உயிரினக் காப்பக அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மண்டபம் வனச் சரகர் சதீஷ் தலைமையில், வன உயிரின ஊழியர்கள் குணசேகரன், காளிதாஸ் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் தோணித்துறைப் பூங்கா பகுதிக்குச் சென்றனர். அங்கு இவர்களைக் கண்ட கடத்தல்காரர்கள், கடலில் குதித்துத் தப்பினர். வேட்டை தடுப்புக் காவலர்கள், கடலில் குதித்தவர்களைத் துரத்திச் சென்ற நிலையில், அவ்வழியாக வந்த நாட்டுப்படகு ஒன்றில் ஏறி, அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதையடுத்து, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்களையும், சுமார் 30 கிலோ கடல் அட்டைகளையும் பறிமுதல்செய்தனர். இருசக்கர வாகனங்களில் இருந்த ஆவணங்களின் அடிப்படையில், தப்பி ஓடிய பெரியபட்டினத்தைச் சேர்ந்த முகமது உசைன், நல்ல இப்ராஹிம், மண்டபம் முகாமைச் சேர்ந்த ராமு உள்ளிட்டோரை வன உயிரினப் பாதுகாப்பு அலுவலர்கள் தேடிவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!