'சர்கார்' படத்தில் யோகி பாபுவின் புது கெட்டப் - வைரலாகும் வீடியோ!

விஜய் நடிக்கும் 'சர்கார்' படத்தில், யோகி பாபுவின் புது கெட்டப் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

சர்கார் வீடியோ


இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் பிறந்தநாளுக்கு முந்தைய தினமான ஜூன் 21 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்டோர் அரசியல்வாதிகளாக நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார்  நடிக்கிறார்.  சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்துவருகிறது.  குறுகிய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கிவரும் யோகி பாபுவும், சர்கார் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கேமரா பில்டர் மூலம் யோகி பாபுவுக்கு பெண் வேடமிடப்பட்டுள்ளது. அப்போது, அவரை கன்னத்தில் யாரோ ஒருவர் கிள்ளுகிறார். அவரது கை மட்டுமே வீடியோவில் தெரிகிறது. இந்த வீடியோவைப் பதிவிட்ட நடிகை வரலட்சுமி, கிள்ளுவது யாருடைய கை என்று கண்டுபிடியுங்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. குறிப்பாக, அது நடிகர் விஜய்யின் கை என்று வரலட்சுமியின் கேள்விக்கு  நெட்டிசன்கள் பதில் கூறியவாறே அதை ஷேர் செய்துவருகின்றனர்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!