வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (17/07/2018)

கடைசி தொடர்பு:12:40 (17/07/2018)

பன்னீர்செல்வம் மீதான குற்றச்சாட்டு குறித்து ஏன் விசாரிக்கவில்லை..! உயர் நீதிமன்றம் கேள்வி

'ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக, இதுவரையில் விசாரணை நடத்தாதது ஏன்?' என்று மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

ஓ.பன்னீர்செல்வம்

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 'ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்த சொத்து மதிப்புக்கும் வருமான வரித்துறையில் தாக்கல்செய்த கணக்குக்கும் முரண்பாடு உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தன் மனைவி, மகன்கள் மற்றும் குடும்பத்தினர் பெயரில் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மார்ச் 10-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தேன்.

அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக மூன்று மாத காலமாகியும் இதுவரையில் விசாரணை நடத்தாதது ஏன்? இந்த வழக்கை ஏன் சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடக் கூடாது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக, திங்கள்கிழமை விளக்கமளிக்க வேண்டும் என்று மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர்.