ஜூலை 18-ம் தேதி மா.செ. கூட்டமா?- ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் விளக்கம்

``வரும் 18-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஶ்ரீராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது என்ற செய்தியில் உண்மை இல்லை" என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் விளக்கமளித்துள்ளார்.

ரஜினி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக ஜூலை 16-ம் தேதி(இன்று) டெல்லி சென்று அங்கிருந்து டேராடூன் செல்கிறார், ரஜினி. இந்தச் சூழ்நிலையில் `ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜூலை 18-ம் தேதி முதல் 21-ம் தேதிவரை நடக்கப் போகிறது. ஶ்ரீராகவேந்திரா மண்டபத்தில் நடக்கப்போகும் இந்தக் கூட்டம் சுதாகர் தலைமையில் நடக்கும். அந்தக் கூட்டத்தில் ரஜினி வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக மாவட்டச் செயலாளர்களிடம் பேசப்போகிறார்' என்று செய்தி பரவி வருகிறது.

என்னதான் உண்மை என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகரிடம் கேட்டோம். `வரப்போகும் 18-ம்தேதி முதல் தமிழகத்தில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஶ்ரீராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது என்ற செய்தியில் உண்மை இல்லை. தலைவர் வீடியோ வாயிலாக மாவட்டச் செயலாளர்களிடம் பேசுவார்  என்று சொல்லப்படுவதும் பொய்யான தகவல். வழக்கம்போல் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் நேர்காணல் நடக்கும் என்பதே உண்மை'' என்று விளக்கமளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!