வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (17/07/2018)

கடைசி தொடர்பு:14:50 (17/07/2018)

மாவட்ட பொது நூலகங்களில் ஐஏஎஸ் பயிற்சிமையம்..! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

'தமிழ்நாடு முழுவதும் உள்ள 32 மாவட்ட மைய நூலகங்களில், ஐஏஎஸ் தேர்வு பயிற்சிமையம் அமைக்கப்படும்' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றதிலிருந்து கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்திவருகிறார். குறிப்பாக, 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளிலிருந்து ரேங்கிங் முறையை நீக்கினார். அந்தத் திட்டத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதேபோல, நீட் தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்தார். இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 'தமிழகம் முழுவதுமுள்ள 32 மாவட்ட  பொது நூலகங்களில், ஐஏஎஸ் தேர்வு பயிற்சிமையம் அமைக்கப்படும். அந்த பயிற்சி மையங்களில், காணொலி காட்சிமூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்' என்று தெரிவித்தார்.