குன்னூர் எஸ்டேட்டில் வலம் வரும் கரடி! - அச்சத்தில் தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூரை அடுத்த கிரேக் மோர் எஸ்டேட்டுக்கு உட்பட்ட பகுதியில், பாெதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாதையில் நடமாடும் ஒற்றைக் கரடியால் அப்பகுதியில் வசிப்பவர்கள் அச்சத்துடனே பாதையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

கரடி

நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தாெலைவில் அமைந்துள்ளது கிரேக்மோர் கிராமம். அப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிரேக் மோர் தனியார் தேயிலை எஸ்டேட்டில் கூலித் தாெழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். எஸ்டேட்டுக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாதையில் கடந்த சில நாள்களாக ஒற்றைக் கரடி ஜாலியாக நடமாடி வருகிறது. இதனால் தினம்தாேறும் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள், தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் பெண்கள் என அந்த வழியைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் மிகுந்த அச்சத்துடனேயே கரடி நடமாட்டம் உள்ள பகுதியைக் கடந்து செல்ல வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
 

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ``கிரேக் மோர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தினந்தாேறும் எஸ்டேட் பணியாளர்கள் மட்டும் அல்லாது, பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், பாெதுமக்கள் எனப் பலதரப்பட்டாேர் இந்த வழியைப் பயன்படுத்தி வருகிறோம். கரடி நடமாட்டம் இருப்பது தெரிந்தும் இந்த வழியை மிகுந்த எச்சரிக்கையுடனும், அச்சத்துடனும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் கரடி என்பதால், மிகவும் ஆக்ரோஷம் காெண்டதாக இருக்கலாம். எனவே, வனத்துறையினர் கரடியைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!