ஆந்திராவிலிருந்து நக்சலைட்டுகள் தமிழகத்துக்குள் வரத் தொடங்கியிருக்கின்றனர்! - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

`தமிழ்நாட்டில் காவல்துறை எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து நக்சலைட்டுகள் ஆந்திராவுக்குச் சென்றனர். இப்போது ஆந்திராவிலிருந்து நக்சலைட்கள் தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனர்’ என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய பா.ஜ.க அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசுகையில், "தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் செயல்பாடுகள் உள்ளதாக நான் கடந்த பல ஆண்டுகளாகக் கூறி வருகிறேன். அதை இந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. பயங்கரவாதத்தைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் எந்தத் திட்டமும் கொண்டு வரக் கூடாது என்று, இந்தப் பயங்கரவாதிகள் நினைத்து செயல்படுகிறார்கள். தூத்துக்குடியில் 13 பேர் கொல்லப்பட்ட பின்பு, அங்கு பயங்கரவாதிகள் நுழைந்துவிட்டனர் என்று காவல்துறை கூறுகிறது. தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.

பொதுக்கூட்டம்

எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவிடாமல், தமிழ்நாட்டில் வேலை இல்லாத் திண்டாடத்தை ஏற்படுத்தி, படித்த இளைஞர்களைப் பயங்கரவாதிகளாக மாற்றி தங்கள் காரியங்களைச் செயல்படுத்த நினைக்கிறார்கள். முன்பு, தமிழ்நாட்டில் காவல்துறை எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து நக்சலைட்டுகள் ஆந்திராவுக்குச் சென்றனர். இப்போது ஆந்திராவிலிருந்து நக்சலைட்கள் தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனர்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!