வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (17/07/2018)

கடைசி தொடர்பு:18:00 (17/07/2018)

6 வாய்க்கால்கள்... 85 கிலோமீட்டர்...1,000 ஏக்கர்... நிலத்தடி நீரை அதிகரிக்க அசத்தல் திட்டம்!

நிலத்தடி நீருக்காக ஆய்வு

கரூர் மாவட்டத்தில் ரூ.12.5 லட்சம் மதிப்பில் திருமாநிலையூர் வலதுபுரம் வாய்க்காலில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 10,000 ஏக்கர் பாசன வசதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணி மற்றும் வெள்ளத் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளைக் கண்காணிப்பு அலுவலர்/திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலர் ஆசிஸ் வச்சானி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டத்தில் ரூ.12.5 லட்சம் மதிப்பில் திருமாநிலையூர் வலதுபுரம் வாய்க்காலில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சுமார் 10,000 ஏக்கர் பாசன வசதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி மற்றும் 6,000 மீட்டர் முதல் 9,000 மீட்டர் வரை வெள்ளத் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளைக் கண்காணிப்பு அலுவலரும் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலருமான ஆசிஸ் வச்சானி, மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் முன்னிலையில் இன்று (17.7.2018) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, கண்காணிப்பு அலுவலர்/திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலர் கூறுகையில், ''வாழ்வின் ஆதாரமாக அமையும் நீரைப் பாதுகாக்கவும் சேகரிக்கவும் நீர்நிலைகளை, வரத்துவாய்க்கால்களை, நீர்ப் பிடிப்பு பகுதிகளை சீரமைக்க தமிழக அரசு குடிமராமத்து பணிகள் என்னும் திட்டத்தைத் தொடங்கி வைத்ததிலிருந்து கரூர் மாவட்டத்தில் அனைத்து ஏரி, குளங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் பொதுமக்கள் பங்களிப்புடன் மாவட்ட நிர்வாகம் வாயிலாகத் தூர்வாரப்பட்டு வருகிறது. இப்பணிகள் 1.7.2018 முதல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில், அமராவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்குட்பட்ட திருமாநிலையூர், மாயனூர், மணவாசி, பள்ளபாளையம், பஞ்சமாதேவி, சின்னதாராபுரம், நஞ்சக்காலக்குறிச்சி உள்ளிட்ட 6 வாய்க்கால்களில் சுமார் 85 கி.மீட்டர் தொலைவுக்கு தூர்வாரும் பணிகளும் தடுப்புகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் தற்போது 60 சதவிகிதம் பணிகள் நடைபெற்றுள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும் விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.