உடல் முழுவதும் நகக்கீறல்கள்!... சுற்றுலாவுக்கு வந்த ரஷ்யப் பெண்ணுக்கு தி.மலையில் நடந்த துயரம்

திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்த, ரஷ்ய நாட்டு இளம்பெண் மயங்கிய நிலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சுற்றுலா

திருவண்ணாமலையில் உள்ள தனியார் அப்பார்ட்மென்டில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அலினா என்ற இளம்பெண் கடந்த 12-ம் தேதியில் இருந்து தங்கியுள்ளார். தியானம் தொடர்பான ஆய்வு செய்யவும், அது தொடர்பாக ஆசிரமங்களைச் சுற்றிப்பார்ப்பதற்காகவும் 10 நாள் பயணமாக திருவண்ணாமலை வந்துள்ளார். இந்நிலையில், அலினா தங்கியிருந்த அறை நேற்று முழுவதும் திறக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த அப்பார்ட்மென்ட் ஊழியர்கள் அறையின் கதவை தட்டிப் பார்த்துள்ளனர். அவர் திறக்காததால், ஜன்னலைத் திறந்தது பார்த்துள்ளனர். அப்போது, மயங்கிய நிலையில் அலினா விழுந்து கிடந்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அலினாவின் மார்பகம் மற்றும் உடல் பகுதியில் நகக் கீறல்கள் உள்ளதால், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்டாரா என்பது, முழு உடல் பரிசோதனைக்கு பின்பே தெரியவரும் என மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். சந்தேகத்தின் பேரில் அப்பார்ட்மென்ட் ஊழியர் உட்பட நான்கு பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!