மாணவிக்கு நடந்த கொடுமை - குற்றவாளிகளுக்கு எதிராக தமிழக வழக்கறிஞர்கள்!

சென்னையைச் சேர்ந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகள் 17 பேருக்கு ஆதரவாக எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார்கள் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் கூறியிருக்கிறார். 

மாணவி

சென்னையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், பெற்றோருடன் வசிக்கும் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்குக் கடந்த ஏழு மாதங்களாக அந்தக் குடியிருப்பில் பணியாற்றும் ஊழியர்கள்  பாலியல் தொல்லைகொடுத்துவந்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீஸிடம் அளித்த புகாரின் பேரில், 17 பேரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி சிறுமியைத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் இந்த பாதகச் செயலுக்கு எதிராக, தமிழகத்திலுள்ள பலரும் குரல்கொடுத்துக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில்தான், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன், `7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை, கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் குற்றவாளிகள் 17 பேருக்கு ஆதராக, எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராகப்போவதில்லை என சங்கம் சார்பில் முடிவெடுத்திருக்கிறோம். அதோடு, இந்த முடிவை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள சங்கங்களுக்கும் பரிந்துரைக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்கள். 

முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்திலுள்ள மகளிர் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த குற்றவாளிகள் 17 பேரும் அங்கிருந்த வழக்கறிஞர்களால் சரமாரியாகத் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!