வெளியிடப்பட்ட நேரம்: 10:21 (18/07/2018)

கடைசி தொடர்பு:10:21 (18/07/2018)

அறுவைசிகிச்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!

தி.மு.க தலைவர் கருணாநிதி, சிறிய அளவிலான அறுவைசிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதி, வயது முதிர்வின் காரணமாகவும், உடல்நலக் குறைபாட்டின் காரணமாகவும் ஒரு வருடத்துக்கும் மேலாக கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் ஓய்வில் இருந்துவருகிறார். அவருக்கான பணிவிடைகளை உதவியாளர்கள் செய்துவருகின்றனர். கருணாநிதி,  பேரக் குழந்தைகளுடன் விளையாடும் போட்டோக்களும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகிவந்தன. அவருக்கு,  சிறிய அளவில் உடல்நலக் குறைபாடு ஏற்படும்போது, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், சிறிய அறுவைசிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இரண்டு நாள்கள் வரை மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிகிறது.