வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (18/07/2018)

கடைசி தொடர்பு:12:44 (18/07/2018)

சேலம் எட்டு வழிச் சாலை விவகாரம்..! விவசாயிகளிடம் கருத்துக் கேட்ட சீமான் கைது

சேலத்தில், எட்டு வழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்த சீமானை காவல்துறையினர் கைது செய்தனர். 

சீமான்

எட்டு வழிச் சாலை திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் ஆகிய பணிகளுக்காக, சேலம் பகுதி விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. தமிழக அரசின், இந்தச் செயலுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தத் திட்டங்களுக்குப் பாதகங்களை விளக்கும் கூட்டம் ஒன்றை குப்பூர் பகுதியில் நடத்தினார். இதுதொடர்பாக சீமான் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

அந்த வழக்கில், ஓமலூர் நீதிமன்றம் சீமானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. எனவே, சேலம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்துப் போடுவதற்காக, சீமான் சேலத்தில் தங்கியுள்ளார். இந்த நிலையில், கூமாங்காடு பகுதியிலுள்ள எட்டு வழித்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச்  சந்தித்து, அவர்களது  கருத்துகளைக் கேட்டறிந்தார். அப்போது வந்த காவல்துறையினர், அவரைக் கைதுசெய்தனர்.