``29 அரசு மதுபானக் கடைகள் தனியாருக்கு டெண்டர்” - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு

`நிர்வாகம் சரியில்லாததால், 29 அரசு மதுபானக்கடைகள் தனியாருக்கு டெண்டர் விடப்படும்' என்று புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

மதுபானக் கடைகள்

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018-19 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. அதில், இன்றைய கேள்வி நேரத்தின் போது, அரசு சார்பு நிறுவன மதுபானக்கடைகள் தொடர்பான கேள்வியை எழுப்பினார், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர். அவரது கேள்விக்குப் பதலளித்த சமூக நலம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கந்தசாமி, “அரசு சார்பு நிறுவனங்களான பாப்ஸ்கோ, அமுதசுரபி, பாசிக்  மற்றும் கான்ஃபெட் உள்ளிட்டவற்றின் கீழ் 61 மதுபானக்கடைகள் இயங்கிவருகின்றன.

அமைச்சர் கந்தசாமி

இவற்றில் சரியான நிர்வாகம் இல்லாததால், 29 மதுபானக்கடைகள் நஷ்டத்தில் இயக்கப்பட்டுவருகிறது. வருமானமே இல்லாமல் அங்கு பணிபுரியும் 1,100 ஊழியர்களுக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுவருகிறது. அதனால், நஷ்டத்தில் இயங்கும் அரசு சார்பு நிறுவன மதுபானக் கடைகளை லாபத்தில் இயக்க, தனியாருக்கு டெண்டர் விடப்படும்” என்று அறிவித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!