பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்..! எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் சென்னைப் பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மலர் விழி முன்னிலையில் எஸ்.வி.சேகர் இன்று ஆஜராகினார்.

எஸ்.வி.சேகர்

பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை ஆளுநர் தட்டிய விவகாரத்தில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் எஸ்.வி.சேகர் அவதூறாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அந்தச் சம்பவத்துக்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன. எஸ்.வி.சேகருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதனையடுத்து, அந்த வழக்கில் எஸ்.வி.சேகருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் காவல்துறையினர் அவரைக் கைது செய்யவில்லை. 

இதுதொடர்பாக எஸ்.வி.சேகர் கடந்த மாதம் 20-ம் தேதி எழும்பூர் பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். அன்றைய தினமே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு வழக்கின் விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று, வழக்கு விசாரணைக்கு வந்தபோது எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகினார். அப்போது அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டு வழக்கின் விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!