ஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்..!

ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேஷ்குமார் இன்று ஆஜரானார். 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. அந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் இறுதி நாள்களில் உடனிருந்தவர்கள் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். அப்போலா மருத்துவமனை உரிமையாளர் பிரதாப் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், முன்னாள் சென்னை ஆணையாளர் ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானோர் விசாரணை ஆணையத்தில் விளக்கமளித்தனர். இந்தநிலையில், செப்டம்பர் 22-ம் தேதி போயஸ்கார்டனிலிருந்து ஜெயலலிதாவை ஆம்புலன்ஸில் அப்போலோவுக்கு ஏற்றிச்சென்ற ஓட்டுநர் சுரேஷ்குமார் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கத்தை அளித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!