`எங்கள் ஊருக்கு பள்ளிக்கூடம் வேண்டும்' - சமையல் செய்து கிராம மக்கள் நூதனப் போராட்டம்!

சிவகங்கை அருகே பள்ளிக்கூடம் கேட்டு கிராம மக்கள் சமையல் செய்து, பள்ளி மாணவர்களோடு போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளிக்கூடம் கேட்டு போராட்டம்

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகில் உள்ளது திருவேலன்குடி கிராமம். இந்தக் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தை மட்டுமே  நம்பி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால், சொந்த ஊரில் கல்வி கற்க தொடக்கப்பள்ளிகூட இல்லை என்று வேதனைப்படுகிறார்கள் கிராம மக்கள்.

``இந்தக் கிராமத்தில் தொடக்கக் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 50-க்கும் மேல் இருக்கும். ஒவ்வொரு நாளும் படிப்பதற்காக சுமார் எட்டு கி.மீ தூரம் நடந்தும் சைக்கிளிலும் வாகனத்திலும் பயணம் செய்து படித்து வருகிறார்கள். கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒவ்வொரு முறையும் பள்ளிக்கூடம் அமைக்கச்சொல்லி முறையிட்டும் பலனில்லை. இந்த நிலையில் இன்றைக்கு ஊர் கூடி முடிவெடுத்து பிள்ளைகள் யாரும் பள்ளிக்கூடம் செல்லாமல் எங்கள் ஊர் முத்துமாரியம்மன் கோயில் திடலில் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்தியும் மதிய உணவும் வழங்கி வருகிறோம்'' என்கிறார்கள் ஊர் இளைஞர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!