`கோலிசோடா 2’ படத் தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த தியேட்டர் ஊழியர்கள்

தியேட்டர்  

கடந்த பிப்ரவரி 16-ம் தேதி `மனுசனா நீ' என்ற தமிழ் படத்தை ஆன்-லைனுக்கு விற்பனை செய்ததாகக் கிருஷ்ணகிரி தியேட்டர் உரிமையாளர் முருகனை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் மீண்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் `கோலிசோடா 2' திரைப்படத்தை விற்பனை செய்ததாக மூன்று தியேட்டர் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 'கோலிசோடா 2; திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்தது. இந்தத் திரைப்படம் வெற்றி பெறாத நிலையில் படம் திரைக்கு வந்த சில நாள்களில் இந்தப் படத்தின் திருட்டு விசிடிகள் சந்தைக்கு வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த படத்தின் தயாரிப்பாளர் பரத் சீனி தனியாக விசாரணை மேற்கொண்ட னர். அப்போது படத்தைத் திருட்டுத் தனமாகப் பிரின்ட் எடுத்தது கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தியேட்டர் என்று தெரிந்தது. அது குறித்து ஆதாரங்களுடன் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீஸாரிடம் தயாரிப்பாளர் பரத் சீனி புகார் கொடுத்தார். 

தியேட்டர் புரஜெக்டர் பறிமுதல்

அதன்படி, இன்ஸ்பெக்டர் தாரணி, திரையரங்குக்கு வந்து புரொஜெக்டர், கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஒளிபரப்பு சாதனங்களைப் பறிமுதல் செய்து ஊழியர்கள் மூன்று பேரை கைது செய்தார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!