`நிலம் வாங்கிட்டேன்.. விவசாயம் செய்யப் போறேன்!’ - நடிகர் கார்த்தி அதிரடி அறிவிப்பு | Will do farming works soon, says actor Karthi

வெளியிடப்பட்ட நேரம்: 18:12 (18/07/2018)

கடைசி தொடர்பு:18:12 (18/07/2018)

`நிலம் வாங்கிட்டேன்.. விவசாயம் செய்யப் போறேன்!’ - நடிகர் கார்த்தி அதிரடி அறிவிப்பு

`கடைக்குட்டி சிங்கம்' படம் வெளியானதையொட்டி நடிகர் கார்த்தி மற்றும் படக்குழுவினர் திருச்சி வந்து ரசிகர்களைச் சந்தித்தனர். அப்போது, நடிகர் கார்த்தி, விவசாயம் செய்யப்போவதாகத் தெரிவித்தார்.

கார்த்தி

நடிகர் கார்த்தி - சாயிஷா நடித்த `கடைக்குட்டி சிங்கம்' படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களைச் சந்திக்க அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ், நடிகர்கள் கார்த்தி, சரவணன் ஆகியோர்  இன்று திருச்சி வந்தனர். படக்குழுவினர் திருச்சியிருந்து புதுக்கோட்டைக்குப் புறப்பட்டனர். முன்னதாக திருச்சியில் ரசிகர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி,`கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் படத்தை அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள். மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என விருப்பப்பட்டேன். படத்தில் உள்ள காட்சிகள் அனைத்தும் உண்மையாகவே இருக்கிறது. படம் எடுக்கும்போதே நாங்கள் அழுதோம், தற்போது படத்தைப் பார்த்துவிட்டு மக்கள் நெகிழ்ந்து அழுகிறார்கள். எனக்கு விவசாயம் பிடிக்கும். விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், நேரம் இல்லை. இப்போதும் கிராமத்துக்குச் சென்றால் மண்வெட்டி பிடித்து விவசாய வேலைகளைச் செய்கிறேன். விவசாயம் செய்ய நானும் நிலம் வாங்கி விட்டேன்" என்றார்.

கார்த்தி

 தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, ``நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணி நிச்சயம் போட்டியிடும். எடுத்த வேலை முடிக்கும் வரை அதே அணியில் வேலை செய்வேன். நம்மை நாம் பார்த்துக்கொள்ளாமல் வேறு யார் பார்த்துக்கொள்வது. என்றவரிடம், `நடிகர் சங்கம் தேவை இல்லை என்று நடிகர் ஜீவா கூறியிருக்கிறாரே` என்று கேட்டதற்கு, தற்போது அது பற்றிக் கூற முடியாது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க