`ஐ.டி சோதனை மட்டும்தான் நடக்கிறது... வழக்குகள் பதிவாவதில்லை' - கே.பாலகிருஷ்ணன் சாடல்

``தமிழகத்தில் நடைபெறும் ஊழல் வழக்குகளை விசாரிக்க சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளை சென்னை உயர் நீதிமன்றம்   நியமிக்க வேண்டும்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்யின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.செய்தியாளர்களிடம் கூறினார்.

பாலகிருஷ்ணன்

கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று விருதுநகருக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,''மாநில அரசை அடிபணிய வைக்கவே மத்திய அரசு, தொடர் வருமான வரிச் சோதனையைத் தமிழகத்தில் நடத்தி வருகிறது. வருமான வரிசோதனை மூலம் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை அடிப்படையாக வைத்து வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை வருமான வரித்துறை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் ஊழல் வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரிக்க சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து ஆகஸ்ட் 1-ம் தேதி 'என் நிலம்' என்ற கோரிக்கையுடன் திருவண்ணாமலையிலிருந்து சேலம் வரை நடைப்பயணம் செல்ல உள்ளோம்'' என்றார். 

     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!