வெளியிடப்பட்ட நேரம்: 08:29 (19/07/2018)

கடைசி தொடர்பு:08:29 (19/07/2018)

`தமிழகத்தின் சிறந்த மகன்' - ஸ்டாலினைப் பாராட்டிய ராகுல் காந்தி!

`தமிழகத்தின் சிறந்த மகன் ஸ்டாலின்' என ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். 

ஸ்டாலின் - ராகுல்கந்தி

நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை மழைக்கால கூட்டத்தொடரிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கடந்த 16-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டு, காங்கிரஸ் கோரிக்கையைத் தெரியப்படுத்தியிருந்தார். காங்கிரஸின் இந்தக் கோரிக்கைக்கு, அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க சார்பில் அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருந்தார். அதில், ``தேர்தல் அமைப்புகளில் பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி தொடர்ந்து ஆதரவு அளித்துவந்தார். அந்த வகையில், ராகுல் எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது. தி.மு.க சார்பில் இந்த முயற்சிக்கு எங்கள் ஆதரவு உண்டு" எனவும் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், ஸ்டாலின் ஆதரவளித்ததைத் தொடர்ந்து அவரைப் பாராட்டியுள்ளார் ராகுல்காந்தி. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், `` நன்றி ஸ்டாலின். உங்கள் ஆதரவு, தமிழ்நாட்டின் சிறந்த மகன் மற்றும் ஒரு உண்மையான தலைவர் என்பதற்கு எடுத்துக்காட்டு போல இருந்தது. இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியம். இந்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா, இந்த உண்மையை அங்கீகரிக்கிறது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை ஆதரிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுசேரும் நேரம் இது" என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க