பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட முதல் முதல்வர் பழனிசாமி!

மேட்டூர் அணை

கர்நாடகம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மிகத் தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து பன்னிரண்டாயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 107 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக, அணைப் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணிகளும் கட்டடங்களுக்கு வெள்ளை அடிக்கும் பணிகளும் நடைபெற்றுவந்ததோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரியின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் தண்ணீர் திறப்பைப் பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டார். முதற்கட்டமாக, தமிழக முதல்வர் 3000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. படிப்படியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் பழனிசாமி

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், கருப்பண்ணன், செங்கோட்டையன், விஜயபாஸ்கர், சரோஜா மற்றும் மாவட்ட கலெக்டர் ரோஹிணி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடும் முதல் முதல்வர், எடப்பாடி பழனிசாமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!