சரத்பவார், யஷ்வந்த் சின்காவுடன் வைகோ சந்திப்பு!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் பா.ஜ.க அதிருப்தி தலைவர் யஷ்வந்த் சின்கா ஆகியோரை வைகோ சந்தித்துப் பேசியுள்ளார். 

வைகோ - யஷ்வந்த் சின்கா - சரத்பவார்

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நேற்று நடந்த ஸ்டெர்லைட் மேல்முறையீடு வழக்கில் ஆஜராகி வாதாடினார். அப்போது, வைகோவை மனுதாரராக சேர்க்கக் கூடாது என ஸ்டெர்லைட் தரப்பில் வாதிடப்பட்டது. இதனால், அவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு பா.ஜ.க அதிருப்தி தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்காவை அவரது இல்லத்தில் வைகோ சந்தித்துப் பேசியுள்ளார். சந்திப்பின்போது, செப்டம்பர் 15ல் ஈரோட்டில் நடைபெற இருக்கும் ம.தி.மு.க முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க யஷ்வந்த் சின்காவுக்கு வைகோ அழைப்பு விடுத்தார். 

இதேபோல, இன்று காலை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சருமான சரத்பவாரை அவரது இல்லத்தில் வைகோ சந்தித்துப் பேசினார். அவரையும்  ம.தி.மு.க முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இருவரும் மாநாட்டில் கலந்துகொள்வாதாகக் கூறியுள்ளதாக, ம.தி.மு.க சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!