கோத்தகிரியில் மக்கள் நடமாடும் பகுதியில் கரடிகள் சண்டை!

பத்து நிமிடங்களுக்கும் மேலாக சண்டை நடந்திருக்கிறது. இதைப் பார்த்த ஊரில் உள்ள நாய்கள் துரத்தியதில் இரண்டு கரடிகளும் பக்கத்திலிருந்த புதருக்குள் சென்று மறைந்திருக்கின்றன.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், நேற்று முன்தினம் மாலை ஆறு மணி அளவில் மக்கள் நடமாட்டம் இருக்கிற பகுதியில், இரண்டு கரடிகள் சண்டையிட்டுள்ளன. இதை அப்பகுதியிலுள்ள மக்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவில், கரடிகள் இரண்டு ஆக்ரோஷமாக சண்டையிடுகின்றன. பத்து நிமிடங்களுக்கு மேல் சண்டை நடந்திருக்கிறது. அதைப் பார்த்த  நாய்கள், அவற்றைத் துரத்தியதால், பக்கத்திலிருந்த புதருக்குள் சென்று மறைந்திருக்கின்றன. பள்ளிக்கூடம் விட்டு குழந்தைகள் செல்கிற நேரத்தில், கரடிகள் சண்டையிட்டுள்ளது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கரடிகள்

அதே பகுதியில், ஆறு கரடிகளுக்கும்  மேல் இருப்பதாகவும், காலை மாலை வேளைகளில் அவை சர்வசாதாரணமாக ஊருக்குள் வந்து விடுவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கிறார்கள்.  ஒரு வாரத்துக்கு முன்பு, கடைவீதி என்கிற பகுதியில் ஒருவரைக் கடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், தினந்தாேறும் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள், தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் பெண்கள் என பலரும் மிகுந்த அச்சத்துடனேயே அந்தப் பகுதியைக் கடந்துசெல்ல வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். சமீப காலமாக நீலகிரி மாவட்டத்தில்  கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  இரண்டு நாள்களுக்கு முன்பு, குன்னூர் அருகே  ஒரு கரடி ஊருக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!