''குமரி மாவட்டத்துக்கு  புதிய செயலாளர்கள்..!'' டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

டிடிவிதினகரன்

கட்சி அமைப்பு ரீதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, புதிய மாவட்டச் செயலாளர்களாக கே.டி.பச்சைமால், டி.ஜெங்கின்ஸ் ஆகியோரை டி.டி.வி.தினகரன் நியமித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கட்சிப் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் எனச் செயல்பட்டுவரும் மாவட்டக் கழக அமைப்பு, இன்று முதல் கட்சி அமைப்பு ரீதியாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் என இரண்டு மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் (அமைப்புச் செயலாளர்) நியமிக்கப்பட்டுள்ளார். பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளராக டி.ஜெங்கின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு, கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், டி.டி.வி.தினகரன் வெளியிட்ட இன்னொரு அறிவிப்பில், ''கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக வி.காசிநாத பாரதி (பஞ்சநதிக்குளம், நடுச்சேத்தி அஞ்சல், வேதாரண்யம்), கே.சிவசங்கரி (எம்.ஜி.ஆர் நகர், தென்சென்னை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்'' என்று அறிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!