`ஒரு வாரத்தில் கசந்த காதல் திருமணம்' - பொது இடத்தில் கணவரைத் தாக்கிய மனைவி

`என்னைப் போல எத்தனை பெண்களை ஏமாற்றியிருப்பாய்' என்று கோவை சாய்பாபா கோயில் பகுதியில் இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்த இளம்பெண் ஒருவர், சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காதல் திருமணம் செய்த ஜோடி

பொது இடத்தில் இளைஞர் ஒருவரை இளம்பெண் தாக்கிய சம்பவம் குறித்து விசாரித்தோம். அவர்கள் இருவரும் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த வாரம்தான் காதலித்துத் திருமணம் செய்துள்ளனர். இன்பமாகச் செல்லவேண்டிய இல்லற வாழ்க்கை, ஒரு வாரத்திலேயே இந்த தம்பதிக்கு வேப்பங்காயாகக் கசந்துவிட்டது. காதலித்து திருமணம் செய்த கணவரின்  கையில் வேறு ஒரு பெண்ணின் பெயர் பச்சைக் குத்தப்படிருப்பதைப் பார்த்து, அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, அவர்கள் கோயிலில் வைத்து சத்தியம் செய்வதற்காக, கோவை சாய்பாபா கோயிலுக்கு வந்துள்ளனர்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பொது இடம் என்றுகூட பார்க்காமல் அந்தப் பெண், தனது கணவரை சரமாரியாகத் தாக்கினார். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்தப் பெண்ணை சமதானப்படுத்தி, காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு அனுப்பி வைத்தனர். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுக்க, அது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

இந்நிலையில், அந்த நபருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை இருக்கும் தகவல், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!