`ரஜினியின் கருத்து எங்கள் கட்சிக்கு பலத்தைச் சேர்க்கும்' - அமைச்சர் உதயகுமார் பேச்சு

அமைச்சர் உதயகுமார் சைக்கிள் பேரணி

``ரஜினியைப் போன்றவர்கள் கட்சியையும் ஆட்சியையும் வளர்க்கின்றனர்'' என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.

கடந்த 15-ம் தேதி அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகிய இருவரும் மதுரையில் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்தனர். அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் பங்கேற்கவைத்தனர். காமராஜர் பிறந்தநாள் விழாவை விருதுநகரில் முடித்துவிட்டு மதுரை பாண்டி கோயில் அம்மா திடலில் ஜெயலலிதா பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சைக்கிள் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார். ஆர்.பி.உதயகுமார் தலைமையில் புறப்பட்ட சைக்கிள் பேரணி இன்று பேரையூர் பகுதியில் பயணத்தை மேற்கொண்டது.

அப்போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``இன்று மேட்டூர் அணையில் நீரை திறந்து வைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து இந்தச் சைக்கிள் பேரணியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். ஆர்.கே.நகர் தொகுதிக்குள் சென்ற டி.டி.வி.தினகரனுக்கு ஏற்பட்ட நிலை, பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு தொகுதி பக்கம் செல்லும் அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் நிலைதான் நேற்று ஏற்பட்டுள்ளது. ரஜினியைப் போன்றவர்கள் எங்களின் ஆட்சியையும் கொள்கைகளையும் புரிந்துகொண்டு வருகிறார்கள். அது வரவேற்கத்தக்கது. இது கட்சிக்கு மென்மேலும் பலத்தைச் சேர்க்கும்'' எனவும் தெரிவித்தார் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!