வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (19/07/2018)

கடைசி தொடர்பு:17:15 (19/07/2018)

பிராண்ட் ஸ்டிக்கருடன் போலி மதுபானம் விற்பனை ஜரூர்! கண்டுகொள்ளாத போலீஸ்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டது. படிப்படியாக அந்தக் கடைகளை வேறு இடங்களில் மாற்ற டாஸ்மாக் நிறுவனம் முயன்று வருகிறது. புதிய டாஸ்மாக் கடைகளுக்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளதால் ஊருக்கு ஒதுக்குப்புறங்களில் மரத்தடியில் வைத்து மதுபானங்களை விற்க தொடங்கி இருக்கிறார்கள். இதனால் அதிகாலை முதலே மதுபானங்கள் கிடைக்கிறது. டாஸ்மாக் இல்லாத பகுதிகளில் போலி மதுபான பாட்டில்களில் சில பிராண்டுகளின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்கப்படுகின்றன.

டாஸ்மாக், கள்ள மதுபானங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மானாமதி பகுதியில் காலை 6 மணிமுதலே போலி மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இப்பகுதியில் விற்கப்படும் மதுபானங்கள் டாஸ்மாக் வருமானத்துக்கு இணையாக இருக்கும் என்கிறார்கள். அரசு மதுபானக் கடையில் இருந்து கிடைக்கும் காலி பாட்டிலை சேகரித்து அதில் தரமற்ற மதுபானங்களைக் கலந்து விற்பனை செய்து வருகிறார்கள். ஏதாவது சரக்கு கிடைத்தால் போதும் என்று நினைக்கும் குடிமன்னர்கள் அந்த பிராண்டுகளின் தரத்தைப் பார்ப்பதில்லை. கூடுதல் விலையையும் பார்ப்பதில்லை. தமிழகம் முழுவதும் இதே நிலைதான் இருக்கிறது. ‘ஸ்டேஷன்ல இருக்கிறவங்களுக்குத் தேவையானதை நாங்க கவனிச்சுடுவோம். மாதம் ரெண்டு பேரை அவங்க ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் கணக்கு காட்டிடுவாங்க. அதனால எந்தப் பிரச்னையும் இல்லை’ என மதுபானம் விற்பவர்கள் சொல்கிறார்கள். ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவரின் ஆசியோடு போலிமதுபான விற்பனை நடைபெறுவதாகவும், அவர்கள் குடிசைத் தொழிலாக தயாரிக்கும் மதுவைத்தான் கள்ளச்சந்தையில் விற்பதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க