வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (19/07/2018)

கடைசி தொடர்பு:20:40 (19/07/2018)

`ஜெயலலிதாவை ஆளுநர் பார்த்ததாகக் கேள்விப்பட்டேன்!’ - அப்போலோ ஊழியர் வாக்குமூலம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ அவசர சிகிச்சைப் பிரிவு பொறுப்பாளர் சாமுண்டீஸ்வரி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

அப்போலோ

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்தில் பல்வேறு தரப்பினர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துவருகின்றனர். இந்நிலையில் அப்போலோ அவசர சிகிச்சைப் பிரிவு பொறுப்பாளர் சாமுண்டீஸ்வரி விசாரணை ஆணையத்தில் இன்று நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

அதில், “ஜெயலலிதாவை சசிகலா, மருத்துவர் சிவக்குமார் மட்டுமே அறைக்குள் சென்று பார்த்தனர். அவசர சிகிச்சைப் பிரிவு அறைக்கு உள்ளே சென்று பார்க்க வேண்டும் எனில், பிரத்யேக உடை அணிந்து செல்ல வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஜெயலலிதாவை அறை கண்ணாடி வழியாக ஆளுநர் பார்த்ததாகக் கேள்விப்பட்டேன். ஆளுநர் ஏன் உள்ளே சென்று பார்க்கவில்லை என்பது குறித்து எனக்குத் தெரியாது. டிசம்பர் 4-ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, ஐசியூவுக்கு மாற்றப்பட்டு எக்மோ கருவி பொருத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.