டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்.. வயது வரம்பு உயர்வை கவனிக்க!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தியதற்கான அரசாணையை  வெளியிட்டு உள்ளது தமிழக அரசு. 

டிஎன்பிஎஸ்சி

தமிழக அரசுப் பணிகளுக்கு குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல நிலைகளுக்கு, தேர்வுகள் மூலம் ஆட்களை நியமித்து வருகிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். துணை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வணிகத்துறை உதவி ஆணையர்,  ஊரக வளர்ச்சி துறை துணை இயக்குநர் போன்ற பணிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளுக்குப் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பாக பொதுப்பிரிவினருக்கு 30 வயதாகவும், இதர பிரிவினருக்கு 35 வயதாகவும் இருந்தது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் சட்டமன்றத்தில், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தில் கடைப்பிடிக்கப்படுவதுபோல், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இன்று (19.07.2018), வயது வரம்பு உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது தமிழக அரசு. இதில், குரூப் 1 தேர்வுக்கு பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பாக 32 வயது வரையும், இதர பிரிவினருக்கு 37 வயது வரையும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு உயர்த்தி இருப்பதன் மூலம், குரூப் 1 தேர்வுக்கு அதிகளவில் விண்ணப்பிப்பவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!