`பெண்களை மதிக்கப் பழகுங்கள்' - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுரை! | Do respect woman governor said!

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (20/07/2018)

கடைசி தொடர்பு:07:30 (20/07/2018)

`பெண்களை மதிக்கப் பழகுங்கள்' - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுரை!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், `பெண்களை அனைவரும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

புரோஹித்

சென்னை ஆழ்வார்பேட்டையில்  உள்ள சங்கீத வித்வத் சபையில் நடைபெற்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,``இந்திய நாடே பாரத மாதா' என்று பெண்ணின் பெயரால்தான் அழைக்கப்படுகிறது. பெண்களை அனைவரும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பெண் கல்வியில் இந்தியா சிறந்து விளக்குகிறது. இந்திய நாட்டில், அன்னை தெரசா, கல்பனா சாவ்லா, முத்துலெட்சுமி ரெட்டி, ஔவையார், தீபக் கர்மாகர்,சாய்னா நேவால்  உள்ளிட்டோர்  பெண்களின் மகத்துவத்தை உணர்த்துகின்றனர். பெண் கல்வி மிகவும் முக்கியமான ஒன்று.  மகாத்மாக காந்தியின் எளிமையான வாழ்க்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும். அவரின் உயர்ந்த சிந்தனையை இந்தியர்கள் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், எளிமையான வாழ்க்கைக்கு சிறந்த முன்னுதாரணம்' என்று தெரிவித்தார்.