``ஒரு டன் கரும்புக்கு ரூ.3,500 வழங்க வேண்டும்!'' - திருநாவுக்கரசர் வலியுறுத்தல்!

``ஒரு டன் கரும்புக்கு ரூ.3,500 வழங்க வேண்டும்'' என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.

``ஒரு டன் கரும்புக்கு ரூ.3,500 வழங்க வேண்டும். இல்லையென்றால், விவசாயச் சங்கங்களை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தப்படும்'' என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கரும்புக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது.  அந்த முடிவின்படி நியாயமான, கட்டுபடியாகக்கூடிய விலையாக 10 சதவிகித பிழிதிறன் கொண்ட ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.275 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மத்தியில் பேரிடியாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. விவசாய விலைபொருள்களின் விலையை நிர்ணயம் செய்கிறபோது, பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவனங்களையோ, விவசாயச் சங்க பிரதிநிதிகளையோ அழைத்துப்பேசி கருத்து கேட்காமல், மத்திய புள்ளியல் துறை ஆலோசனையின்படி விலை நிர்ணயம்செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மத்திய அரசு, ஒரு டன் கரும்புக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த விலை உயர்வை மத்திய அரசு ஏற்க முன்வரவில்லை எனில், தமிழக விவசாயச் சங்கங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்தி, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக விரைவில் கடும் போராட்டம் நடத்தப்படும்'' என்று அதில் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!