வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (20/07/2018)

கடைசி தொடர்பு:11:04 (20/07/2018)

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார்!

விவேகானந்தா கேந்திரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள, ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகிறார்.

மோகன் பகவத் ஆர் எஸ் எஸ்

கன்னியாகுமரியில், விவேகானந்தா கேந்திரா அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் மற்றும் செயல் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடக்கும். இதில், ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் கலந்துகொள்வது வழக்கம். விவேகானந்தா கேந்திரா உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க இருக்கின்றன. இதில் கலந்துகொள்வதற்காக, ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பகவத் இன்று மாலை கன்னியாகுமரி வருகிறார். தூத்துக்குடியிலிருந்து விமானம்மூலம் கன்னியாகுமரி வரும் அவர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விவேகானந்தா கேந்திரத்தில் நடக்கும் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

விவேகானந்தா கேந்திரா நிகழ்ச்சிகள் தவிர, வெளியே எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், திங்கள்கிழமை அதிகாலை கன்னியாகுமரியிலிருந்து புறப்படுகிறார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருகையையொட்டி குமரி மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாத் தலைமையில்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.