அருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து நாகராஜிடம் விடிய விடிய விசாரணை!

அருப்புக்கோட்டை செய்யாத்துரையின் எஸ்.பி.கே நிறுவனங்களிலும், தமிழகமெங்கும் உள்ள அவருடைய உறவினர், பினாமி வீடுகளில் வருமான வரித் துறையினர் ஐந்தாவது நாளாக சோதனையைத் தொடர்கின்றனர். செய்யாத்துரைக்கு நெருக்கமானவர்களின்  வீட்டிலும், அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றுவருகிறது.

அருப்புக்கோட்டை நாகராஜ்

அருப்புக்கோட்டை வீடு, அலுவலகம்,  கீழமுடி மன்னார்கோட்டையிலுள்ள பூர்விக வீடு, மதுரையிலுள்ள எஸ்.பி.கே ஹோட்டல், மூன்றாவது மகன் ஈஸ்வரனின் வீடு, அலுவலகங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட கட்டுக்கட்டான ஆவணங்களை, அருப்புக்கோட்டையிலுள்ள செய்யாத்துரைக்குச் சொந்தமான கட்டடத்தில் வைத்தே  வருமான வரித் துறையினர் சரிபார்த்துவருகிறார்கள். அது ஒரு தற்காலிக வணிக வரித் துறை அலுவலகமாக தற்போது செயல்பட்டுவருகிறது. 
  
இங்கே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றியும், வங்கிப் பரிவர்த்தனைகள் பற்றியும் வருமான வரித் துறையினர், செய்யாத்துரையின் மூன்றாவது மகன் கருப்பசாமியிடம் நடத்திய விசாரணையில், ``அனைத்து தொழில் விவரங்களும் மூத்த அண்ணன் நாகராஜுக்குதான் தெரியும்" என்று கூறவே, வருமான வரித் துறை அதிகாரிகள் ஐந்து பேர் சென்னையிலிருந்த நாகராஜை நேற்று மாலை அருப்புக்கோட்டைக்கு அழைத்துவந்தார்கள். அவரிடம், நேற்று இரவு முழுதும்  தீவிர விசாரணை நடைபெற்றது. அவர்களின் நிறுவனத்தில் முக்கியப் புள்ளிகளின் பங்கு எவ்வளவு என்பது பற்றியே விசாரணை நடைபெற்றுவருவதாக  சொல்லப்படுகிறது. இன்றும் விசாரணை தொடரும் என கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!